Tuesday 11 November 2014

kisah sedih yang sangat menyayat hati

 KISAH SEDIH YANG SANGAT MENYAYAT HATI. MESTI BACA!!!

மதுரை நகரில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், 1000 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பிருந்தது தெரியவந்துள்ளது. இத்தகவலை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறினார்.
 மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வரும் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலக சர்க்கரை நோய் தினமாகும்.  நம்நாட்டில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அதிலும் தமிழகம் சர்க்கரை.





1990 ஆம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுக்கப்பட்டனர். அப்போது 2025 ஆம் ஆண்டில் எவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இருப்பர் என தோராயமாக குறிப்பிட்டனர். ஆனால், நடப்பாண்டிலேயே அந்த எண்ணிக்கையுள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் தொற்றாநோய் சிகிச்சைத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேரை ரத்தப் பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளோம். அதில் 1000 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது புதிதாக கண்டறியப்பட்டது.
 மதுரை மாவட்டத்தில் 15 சதவிகித சர்க்கரை நோயாளிகள் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது அடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வருவது சகஜமாகிவிட்டது.
 பழைய சாதம், இட்லி, தோசை என உணவுகளை மோர், நீராகாரம், சட்டினி, சாம்பார் என அனைத்திலும் ஊறவைத்து சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு அடித்தளமாவது தெரியவந்துள்ளது.
அரைகுறையாக வெந்த சாதத்தை கீரை உள்ளிட்டவற்றுடன் சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
 நடைப் பயிற்சி முக்கியம். ஆனால், வீடு வாசல் வரை வாகனத்தில் வந்திறங்கும் வசதி கூடியுள்ளதால் பெண்கள் கூட சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் வியர்வை சிந்த நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.
 பரிசோதனைக்கு வாய்ப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி காலை இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில் பரிசோதனையுடன், நோய் பாதிப்புடையோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment